×

விகேபுரம் அருகே சிறுத்தைகள் மீண்டும் நடமாட்டம்

நெல்லை: வி.கே.புரம் அருகே உள்ள மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட வேம்பையாபுரத்தில் கடந்த மார்ச் மாதம் சிறுத்தைகள் வீடுகளில் கட்டப் பட்டிருந்த ஆடு மற்றும் நாய்களை தூக்கி சென்றது. இதனால் அப்பகுதி மக்கள்     சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பாபநாசம் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். இவர்களது கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். தொடர்ந்து 2மாத காலத்தில் 6 சிறுத்தைகள் கூண்டில் சிக்கியது. கடந்த மே மாதம் 15ம் தேதி கடைசியாக 6வது சிறுத்தை கூண்டில் சிக்கியது.

சிக்கிய சிறுத்தைகள் அனைத்தும் காரையாறு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன. இதனால் இப்பகுதி சுற்றுவட்டார மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இவர்களின் நிம்மதி ஒரு மாதம் கூட நிலைக்கவில்லை. நேற்று மாலை வேம்பையாபுரம் அருகே உள்ள திருப்பதியாபுரம் சிஎஸ்ஐ சர்ஜ் அருகே உள்ள பாறையில் இரண்டு சிறுத்தைகள் படுத்திருப்பதை அப்பகுதியிலுள்ள ரத்னசாமி   பார்த்துள்ளார். உடனடியாக இத் தகவல் ஊர் முழுவதும் பரவியது. இதனையடுத்து இந்த சிறுத்தைகளை இப்பகுதி மக்கள் திரண்டுவந்து பார்த்தனர். மீண்டும் இப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டத்தை பார்த்த மக்கள் ஒருவித   அச்சத்துடனேயே உள்ளனர்.


Tags : Panthers ,Wigapuram Wigapuram , Panthers,reappear ,Wigapuram
× RELATED சென்னை வள்ளுவர்கோட்டத்தில் விடுதலைச்...